12 ஆண்டுக்களுக்கு முன் கொரோனா வைரஸ் குறித்து எழுதிய அமெரிக்க பெண் எழுத்தாளர்

ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து துல்லியமாக பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு என்ட் ஆப் டேஸ் என்ற புத்தகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க பெண் எழுத்தாளர் சில்வியா பிரவுனே எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் 312ஆவது பக்கத்தில் 2020-ஆம் ஆண்டு நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவும். இது நுரையீரலையும் சுவாசக் குழாய்களையும் அதிகமாக தாக்கும்.

எந்த மருந்துகளாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. 10 வருடங்கள் கழித்து மீண்டும் பரவி முழுவதும் மறைந்துவிடும் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண் கடந்த 2013-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். அவரால் எப்படி 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வைரஸ் குறித்து அதன் தாக்குதல் குறித்து இத்தனை சரியாக எழுத முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் இதில் ஆறுதலுக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நோய் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பரவி பின்னர் மறைந்துவிடும் என கூறியுள்ளார். எனவே அடுத்த 10ஆண்டுகளுக்குள் கொரோனாவுக்கு மருத்துவ நிபுணர்கள் மருந்து கண்டுபிடித்து விடுவர் என்பதே அந்த ஆறுதலான பதிவாகும்.