வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார்.

இலங்கையின் சமகால அரசியல் நிலவரம், தமிழர்கள் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.