பாராளுமன்றித்தில் நீதியின் குரல்கள் ஒலிக்கும் அது உலகத்தின் ஆன்மாவைத் தொடும் – விக்கி

எமது மக்களுக்கான நீதியின் குரல்கள் பாராளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யார் உண்மையானவர்கள், யார் நேர்மையானவர்கள் என்பது எங்களுடைய மக்களுக்கு நன்கு தெரியும்.ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் பாராளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. 

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது தான் என் மக்களுக்கு நான் கூறவிரும்புவது என்றார்.