பொறுப்போடு செயற்படுவோம் மற்றவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் – சுமந்திரன்

பொறுப்போடு செயற்படுவோம் மற்றவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தின் தெரிவித்தார். 

வேட்பு மனுத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம் தேர்தல் ஆணைக்குழு வேட்புமனு நிறைவானதைத் தொடர்ந்து சில தீர்மானங்களை எடுக்கம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கொரோனா வைரஸ் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி தேர்தலை பிற்போடவேண்டும் என்பதைக்கூறியுள்ளோம்.

பது மக்களின் பாதுகாப்பு எங்களின் அதியுச்ச கருசனையாகவுள்ளது அதனுடன் இணைந்து சுயாதீனமான ஒரு தேர்தல் நடக்கவேண்டுமாகவிருந்தால் ஜனநாயக பண்பியல்புகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் சுயாதீனமாக தேர்தல் பிரச்சாரம் செய்ப்படவேண்டும் மக்கள் பரப்புரைக்கூட்டங்களுக்கு சென்று வரக்கூடிய நிலைமை ஏற்படவேண்டும் தேர்தல் அன்று மக்கள் சுயாதீனமாக சென்றுவரக்கூடிய நிலை இருக்கவேண்டும் இருக்குமாக இருந்தால் தான் அது சுயாதீனமான தேர்தலாக இருக்கும்.

நாங்கள் இன்று போட்டியிடும் கட்சிகள் ஆட்சியில் இருக்கிறவர்களைத் தவிர மற்ற எல்லா முக்கிய கட்சிகளும் தேர்தலைப் பிற்போடுமாறு கேட்கின்றார்கள் வேட்புமனுக்கான காலம் நீடிக்கப்படாத காரணத்தினால் நாங்கள் இன்றைய தினம் அமைதியாக எவருக்கும்இடைஞ்சல் இல்லாது சன நெருக்கடி இல்லாத சூழ்நிலையில் இந்த வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றோம்.

தொடர்ந்தும் எங்கள் பரப்புரைகளை நிறுத்தி வைப்போம் மக்கள் கூடும்இடங்களை தவிர்ப்போம் பொறுப்போடு செயற்படுவோம் மற்றவர்களும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றோம். சூழ்நிலை சரியான நிலைக்கு வரும் போது நாங்கள் எங்கள் நடவடிக்கைகைள மேற்கொள்ளலாம் என்றார்.