முகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சித்தமருத்துவ குறிப்புகள்

 • கண்ணாடியை தினந்தோறும் கூர்பார்வை பயிற்சி செய்து வர முகம் வசிகரமாகும்.
 • அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.
 • சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவிட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறுகட்டிகள் வராது.
 • சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.
 • அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.
 • சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவிட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறுகட்டிகள் வராது.
 • சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து முகத்தில் பூசி வர வசீகரம் உண்டாகும்.
 • இஞ்சியை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர முகம் பொலிவு பெறும்.
 • அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும். தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.
 • துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு குளித்து வந்தால் முகம் அழகு பெரும்.
 • அள்ளி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு ஒழியும்.
 • கடல் சங்கை பாம்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
 • முகச் சுருக்கம் மறைய முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
 • முகம் பளபளக்க நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது, ஆலிவ் ஆயில் இவற்றை சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
 • அருகம்புல் சாற்றுடன் வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும் முக அழகும் கூடும்.
 • முகத்தில் உள்ள முடிகள் அகல வேப்பங்கொழுந்து,குப்பைமேனி இலை,விரலி மஞ்சள் இவைகளை அரைத்து முகத்தில் பூசி காய வைத்து கழுவி வர வேண்டும்.
 • சுத்தமான புனுகை முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள பரு மறையும்.
 • எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை,மாலை குடித்து வர மருவு கரப்பான் பிளவை குணமாகும்.
 • பாலுண்ணி நீங்க சுண்ணாம்பு,நவச்சாரம் இரண்டையும் குழப்பி தடவி வந்தால் குணமாகும்.
 • அவரை இலைச்சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்கும்.
 • சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காயவைத்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குணமாகும்.
 • சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்து முகத்தில் பற்றுப் போட்டு வந்தால் முகப்பரு குணமாகும்.
 • மஞ்சள் தூள்,சோற்றுக்கற்றாளை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு மறையும்.
 • வேப்பிலை,பெருங்காயம் ,திருநீற்று பச்சை இவைகளை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி சரியாகும்.
 • சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் உரைத்து முகத்திற்கு பூசி வர முகப்பரு,படர்தாமரை சரியாகும்.
 • முகம் பளபளக்க அவரி இலையை உலர்த்தி தூள் செய்து தினமும் 5 கிராம் அளவு காலை உணவிற்கு பிறகு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
 • கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன் முகத்தில் தடவி காய்ந்த பிறகு முகத்தை கழுவி வர முகம் வலுவலப்பாக இருக்கும்.
 • கரும்புள்ளிகள் குறைய சிறிதளவு கடலை மாவை பால் ஏட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
 • அம்மைத் தழும்பு குறைய கேரட்டின் சாற்றோடு ஆரஞ்சுப் பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கலந்து பூசி வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்புகள், சிறுப் புள்ளி ஆகியவைகள் குறையும்.
 • கன்னத்தில் கருப்புப் புள்ளிக் குறைய ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புப் புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.
 • கன்னத்தில் கருப்புப் புள்ளிக் குறைய ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புப் புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.
 • முகச்சுருக்கம் குறைய ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து பிறகு ஆப்பிள் கூழை முகத்தில் பூசி வர முகச்சுருக்கம் குறையும்.
 • பருத்த கன்னம் பெற முளைகட்டிய பச்சை பயறு,சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட பருத்த கன்னம் பெறும்.
 • பருத்த கன்னம் பெற முளைகட்டிய பச்சை பயறு,சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட பருத்த கன்னம் பெறும்.
 • முகம் அழகு பெற தினமும் இரவில் பாலில், பாதாம் பொடி, தேன் கலந்து குடித்து வர முகம் அழகு பெறும்.
 • முகம் பளபளப்பாக கொதிக்க வைத்த கேரட் சாறினை ஆறிய பிறகு முகத்தில் தேய்த்துக் குளிக்க முகம் பளபளப்பாகும்.
 • முகம் பளபளப்பாக பன்னீர் ரோஜா, வசம்பு, கஸ்தூரி மஞ்சள், புனுகு பட்டை, கடலை பருப்பு, பாசிபருப்பு, பூலங்கிழங்குஇவைகளை பொடி செய்து உபயோகித்தால் முகம் பளபளக்கும்.
 • முகஅழகு கூட தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகத்தின் அழகு கூடும்.
 • முகம் அழகு பெற துளசி இலையை முகத்தில் தேய்க்க முகம் அழகு பெறும்.
 • முகம் பளபளப்பாக கொதிக்க வைத்த கேரட் சாறினை ஆறிய பிறகு முகத்தில் தேய்த்துக் குளிக்க முகம் பளபளப்பாகும்.
 • முகப்பொலிவு உண்டாக முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு உண்டாகும்.
 • முகப்பொலிவு உண்டாக முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பொலிவு உண்டாகும்.
 • முகம் பிரகாசமாக கடலைமாவு ,தேன், பால் , பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் முகம் பிரகாசமாகும்.
 • முகம் பொலிவு பெற வாழைப்பழத்தை மசித்து பால், தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
 • முகம் பொலிவுற கஸ்தூரி மஞ்சள், விரலிமஞ்சள், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவுறும்.
 • முகப்பொலிவு பெற எலுமிச்சை சாறில்சந்தன கட்டையைஉரைத்து முகத்தில்பூச முகம் பொலிவு பெறும்.
 • உருளைக்கிழங்கு சாற்றை கருவளையத்தின் மீது பூசி பின் கழுவ கருவளையம் குறையும்.
 • எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு சேர்த்து தடவ கண்களுக்கு கீழ் கருவளையம் குறையும்.
 • சோற்றுக்கற்றாழை இலை,பப்பாளி கூழ் கலந்து முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ கருவளையம் குறையும்.
 • தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.
 • முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும்.
 • காசினிக் கீரை சாப்பிட்டு வந்தால் முகத்தில் பரு, கட்டி வராமல் தடுக்கலாம்.
 • ஆடுதீண்டாப்பாளை இலையை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பசும் மஞ்சள், வசம்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து விழுதை ஆடுதீண்டாப்பாளை இலைச்சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.
 • சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.
 • கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.
 • சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.
 • சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்து பற்றுப்போட முகப்பரு குறையும்.
 • வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து போட முகப்பரு குறையும்.
 • சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும்.
 • சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.
 • மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றைஅரைத்து முகத்தில்தடவி வர முகத்தில் பரு குறையும்.
 • சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.
 • வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.
 • பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்.
 • மிளகு, வெள்ளைப் பூண்டு, துத்தி இலை, ஆமணக்கு எண்ணெய் இவைகளை காய்ச்சி முகப்பருவில் போட்டால் முகப்பரு மறையும்.
 • கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து முகத்தில் பூசினால் முகப்பருக்கள் மறையும்.
 • கடலை மாவு, வெந்தயம் தேய்த்து வந்தால் பருக்கள் குறையும்.
 • முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.
 • பருக்கள் மறைய பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் பருக்கள் மறையும்.
 • வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.
 • தக்காளிப் பழத்துண்டுகளை முகத்தில் பதிய வைத்து 10 நிமிடங்களுக்குப் பின் வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும்.
 • தர்பூசணிப் பழத்தோலை அரைத்து முகத்தில் பூசிவைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவி விடலாம்.
 • தோடம் பழத்தோலை பொடியாக்கி தயிருடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடலாம்.
 • கனிந்த வாழைப்பழத்தை பன்னீரோடு சேர்த்துப் பிசைந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கடந்து முகத்தை வெந்நீரில் கழுவுங்கள்.
 • வாழைப்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை பிசைந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கடந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 • பாசிப்பயறு மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
 • பூவரசு சுட்டிக்காயை எலுமிச்சை பழச்சாற்றில் உரைத்து இரவில் படுக்கப் போகும் முன் தேமலில் தடவி காலையில் வெந்நீரில் கழுவி விடுங்கள்.
 • எலுமிச்சம் பழச்சாறுடன் துளசிச் சாறு சேர்த்து தேமலில் பூசவும்.
 • பீட்ரூட் கிழங்கை தினம் சாப்பிட்டுவர வேண்டும்.
 • தாமரைப் பூ இதழ்களை வெந்நீரில் அவித்து அந்த நீரை பருக வேண்டும்.
 • வெள்ளரிக்காய், தக்காளிப்பழம் இவைகளை கூழாக்கி அதில் தேன் சேர்த்து கருந்தேமல் பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
 • கொத்தமல்லி தழையை கசக்கி கருந்தேமல் பகுதியில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 • வெற்றிலையை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் காணப்படும் சொறி குணமாகும்.
 • முகத்தழும்புகள் மறைய பாதாம் பருப்பை நன்கு ஊற வைத்து படுப்பதற்கு முன் முகத்தில் பூசி வர தழும்புகள் மறையும்.
 • குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து படுக்கப்போகும் முன் முகத்தில் பூசி வர தேவையற்ற முடிகள் உதிரும்.
 • துத்தி வேர் பட்டையை நல்லெண்ணையில் போட்டு வெயிலில் 15 நாட்கள் வைத்து பின் பாட்டிலில் சேகரித்து வைத்து தினம் படுக்கப்போகும் முன் எண்ணையை லேசாக முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
 • கசகசாவை எருமைத்தயிரில் அரைத்து படுக்கப்போகும் முன் தினமும் தடவி வர வேண்டும்.
 • தூதுவளைப் பூவை தினம் ஒன்று அல்லது இரண்டு மென்று சாப்பிட்டு வந்தால் முகத்தில் இளமை தவழும். முகம் பளபளப்பாக இருக்கும்.
 • வெள்ளரிக்காய் 1 துண்டு, காரட் 1 துண்டு சாறு எடுத்து பார்லி மாவு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் முகத்தை கழுவி வர இளமை ததும்பும் அழகு முகம் கிடைக்கும்.
 • முட்டையில் வெள்ளைக்கரு, முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு , காளான், ஓட்ஸ் இதெல்லாம் சத்தான வெள்ளை நிற உணவுகள். மேலும் தினமும் பல வண்ணங்களில் உள்ள காய்கறிகள், பழங்கள் இவைகளை சேர்த்துக்கொண்டால் என்றும் இளமையாக இருக்கலாம்.
 • முகப்பரு வந்தவர்கள் டீ, காபி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
 • நரை, திரை, மூப்பு வராமலிருக்க பச்சரிசி கஞ்சியுடன் முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து காய்ச்சி குடித்து வர வேண்டும். மேலும் தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து பருகலாம்.
 • தினம் 2 மணி நேரம் மெளனமாக இருங்கள். இவ்வாறு செய்வதால் முகத்திற்கு தெளிவு கிடைக்கும்.
 • வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதனால் முகப்பொலிவு கிடைக்கும். கோடையில் இளநீர் பருகி வர வயிற்றில் எரிச்சல் நீங்கி குளிர்ச்சி உண்டாகும்.
 • தண்ணீர் நிறைய பருகி வர நல்ல பலன்களை கொடுக்கும்.