இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இன்று காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

அதன்படி இலங்கை அணிக் குழாமினர் இன்று காலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு – 20 தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ளது. 

இதற்­காக 16 பேர் கொண்ட இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டது. 

பல்­வேறு காயங்கள், போதிய உடற்­த­கு­தி­யின்மை கார­ண­மாக விலகி­யி­ருந்த சக­ல­துறை ஆட்­டக்­கா­ரரும் முன்னாள் தலை­வ­ரு­மான அஞ்­சலோ மெத்தியூஸ் 18 மாதங்­க­ளுக்குப் பிறகு இரு­ப­துக்கு-20 அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். 

இவ­ரது வருகை இலங்கை அணிக்கு பின் வரி­சையில் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

எனினும் குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக்க, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுகா, ஒசத, ஷனக்க ஆகியோர் அணியில் உள்ளதால் முதல் இரண்டு போட்­டி­களில் மெத்­தியூஸ் இடம்­பெறுவாரா என்­பது நிச்­ச­ய­மில்லை. 

இலங்கை அணி

மலிங்க (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குண­தி­லக, அவிஷ்க பெர்­னாண்டோ, பானுக்க ராஜ­பக் ஷ, ஒசத பெர்­னாண்டோ, தசுன் ஷனக, அஞ்சலோ மெத்தியூஸ், டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், ஹசரங்கா, சந்தகன், தனஞ்சய டி சில்வா, லகிஹி குமார, இசுரு உதானா. 

Match Details

Jan 05, Sun : India vs Sri Lanka, 1st T20I

Barsapara Cricket Stadium, Guwahati – 7:00 PM

Jan 07 Tue  : India vs Sri Lanka, 2nd T20I

Holkar Cricket Stadium, Indore – 7:00 PM

Jan 10, Fri  : India vs Sri Lanka, 3rd T20I

Maharashtra Cricket Association Stadium, Pune

7:00 PM