அவுஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் சஹிர் தவான் 96 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 80 ஓட்டங்களையும் அணித்தலைவர் விராட் கோலி 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அடம் ஷம்பா 3 விக்கெட்டுகளையும் கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 341 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதனால் 36 ஓட்டங்களால் அவுஸ்ரேலியா தோல்வியடைந்தது.

அணிசார்பாக, ஸ்ரீவன் சுமித் அதிகபட்சமாக 98 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ், ரவீந்திட ஜடேஜா, ஷைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.