மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 7 விக்கெட்டுக்களினால் வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு : 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு : 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை அணியானது முழுமையாக கைப்பற்றி மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியை வைட் வோஷ் செய்திருந்தது.

இதன் பின்னர் ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது 25 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இந் நிலையில் தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர் 157 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது தனது அதிரடியான துடுப்பாட்டத்தினால் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ஓட்டங்களை 158 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது. 

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் சிம்மன்ஸ் 09 ஓட்டங்களையும், பிரண்டன் கிங் 43 ஓட்டங்களையும், ரோவ்மன் போல் 17 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க சிம்ரன் ஹெட்மேயர் 43 ஓட்டங்களுடனும் ரஸல் 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடர‍ை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.