இங்கிலாந்து A அணிக்கு எதிராக விளையாடும் தமிழ் பேசும் இளைஞன்.. தனது முதல் இலக்கு கட்டையை தகர்த்து பதிவு செய்தார்

இங்கிலாந்து A துடுப்பாட்ட அணிக்கு எதிராக  உத்தியோகபூர்வ 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியை 
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி தற்போது கொழும்பு பி.சரா. ஓவல் மைதானத்தில் நடை பெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி தற்போது 180 ஓட்டங்களை 3 இலக்குகள் இழப்புக்கு பெற்றுள்ளது.

பல இளம் வீரர்களும் இலங்கை  அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த மொஹமட் சிராஸ் எனும் தமிழ் பேசும் இளைஞன் இன்று இந்த அணியில் இலங்கை அணிக்காக பந்து வீச்சு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்   மொஹமட் ஷிராஸ் தனது முதல் இலக்கை கைப்பற்றியுள்ளார். இது வரை 10 ஓவர்கள் பந்து வீசி 38 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை கைப்பற்றியுள்ளார்.
105 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் Zak Crawley யின் இலக்கையே யே இவர் கைப்பற்றினார்.