இனியும் டோனி இந்தியாவுக்காக விளையாடமாட்டார் என்று இந்திய அணியின் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் இந்திய அணியின் வீரர் டோனி எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால், தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்தார்.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தால் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டது. தற்போது டோனி அவரது ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மற்ற வீரர்கள் பலர் சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

பலர், கொரோனா வைரஸ் தடுப்புக்கான விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் மற்றும் ரோகித் சர்மா இடையே இன்ஸ்டாகிராமில் உரையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் “எப்போது டோனி இந்திய அணிக்குத் திரும்புவார்” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா “இந்தக் கேள்வியை டோனியிடமே கேட்டுவிடுங்கள், அவருக்கு என்னதான் ஆச்சு என்று தெரியவில்லை” எனப் பதிலளித்தார்.

இதற்குப் பதிலளித்த ஹர்பஜன் சிங் “உங்களுக்கு டோனி இந்திய அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே. என்னைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை. 2019 உலகக் கோப்பை போட்டிதான் இந்தியாவுக்காக தான் விளையாடிய கடைசிப் போட்டி என அவருக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.