இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் மே 28ம் திகதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற யூலை மாதம் நடைபெறுவதாக இருந்த அவுஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து வரும் அவுஸ்திரேலிய அணி தலா மூன்று ஒருநாள், மற்றும் டி20 கொண்ட ஒயிட் பால் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருக்கிறது.

திட்டமிட்டபடி யூலை மாதம் நடைபெறாமல் போனால், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2ம் திகதி முடிவுடையும்.

இதன்பின்னர் அவுஸ்திரேலியாவுடனான தொடரை நடத்தலாம் என தெரிகிறது, அதாவது ரசிகர்கள் முன்னிலையில் இத்தொடரை நடத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.