இலங்கை – இந்தியா இடையே இம்மாதம் நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று அரசு தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளதாலேயே இந்த தொடர் கைவிடப்பட்டது

இலங்கை செல்லவிருந்த இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. கொரோனா பரவி வரும் நிலையிலும் இந்திய அணி விளையாட சம்மதித்துள்ளதாக புதன்கிழமை இலங்கை தெரிவித்தது.

இந்நிலையில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளதால் கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.