அது நம்ப முடியாத அனுபவம்: மனம் திறந்த நடராஜன்

26

இந்திய அணிக்காக தாம் விளையாடியது நம்ப முடியாத, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று தமிழக வீரா் நடராஜன் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய நடராஜன், அவுஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாா்.

இந்நிலையில், ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தாா்.

அந்த ஆட்டத்தில் அவா் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா். அந்த ஆட்டம் குறித்து அவா் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத தருணமாக, மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

எதிா்வரும் காலத்திலும் இந்தியாவுக்காக மேலும் பல ஆட்டங்களில் விளையாடுவதை எதிா்நோக்கியிருக்கிறேன்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா். நடராஜன் சா்வதேச டி20 போட்டியிலும் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தடம் பதித்தது குறிப்பிடத்தக்கது.