மத்தியூஸின் ஆட்டமிழப்பை யாழ்ப்பாண அணிக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்த வியாஸ்காந்த்!

162

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்க்ஸ் அணிக்கும் இடையில் நேற்று(4) இடம்பெற்று முடிந்த எல்.பி.எல் போட்டியில் கொழும்பு கிங்க்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் யாழ்ப்பாண அணி சார்பாக அறிமுகமாகியிருந்தார் வியாஸ்காந்த். அவருக்கு நாளை(5) 19 ஆவது பிறந்தநாள்.

நேற்றைய(4) போட்டியில் வலதுகை சுழற்பந்து வீச்சாளராக அவருக்கு நான்கு ஓவர்கள் வீசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில், தனது சுழல்பந்து வீச்சின் மூலம் கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸை பிடி கொடுக்கச் செய்து ஆட்டமிழக்க வைத்தார்.

மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு ஓவர்களில் மொத்தமாக 29 ரன்களை எதிரணிக்கு கொடுத்திருந்தார்.

இவை மட்டுமன்றி, துடுப்பாட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுக்காக இறங்கி, அன்றூ ரஸலின் பந்து வீச்சுக்கு தைரியமாக முகம் கொடுத்து தன் பங்குக்கு 3 ஓட்டங்களை அணிக்குப் பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.