இமாலய இலக்கை விரட்டியடித்து தொடரை வென்றது இந்தியா!

46

சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (06) சிட்னியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இமாலய இலக்கை விரட்டியடித்து 6 விக்கெட்களினால் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து அபாரமாக 194 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் மத்தியூ வாட் 32 பந்துகளில் (58), ஸ்டீவ் ஸ்மித் (46), மோசஸ் ஹென்ரிஹியூஸ் (26) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் நடராஜன் (20/2) விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் பறிகொடுத்து 195 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கியது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் சிகார்த் தவான் 36 பந்துகளில் (52), ஹர்டிக் பாண்டியா (42*), விராட் கோஹ்லி (40) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்வீப்சன் (25/1) விக்கெட்டை வீழ்த்தினார்.