கம்பளை வைத்தியசாலையில் தலைவலி என்று அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை பகுதியில் வசித்து வருபவர் டிலானி காஞ்சனா இவர் கடந்த சனிக்கிழமை தலைவலி, வாந்தி, என உடல் நிலை சரியில்லாததால் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் பெண்ணிற்கு உரிய முறையில் வைத்தியம் பார்க்காததால் திங்கட்கிழமை மாலை மரணமடைந்துள்ளார்.

பின்பு பிரோத பரிசோதனையின் போது பெண்ணின் தலையில் இரத்தக்கட்டி இருப்பதை வைத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் குறித்த தகவலை ஆர்வலர் ஒருவர் பதிவிட்டு, இதேவேளை குறித்த பெண்ணை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என கூறியுள்ளார். அரசு வைத்தியசாலையில் எல்லாம் பணம்தான் பணம் இருந்தால் தான் அங்கு வேலை நடக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.