ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்புப் பங்குச் சந்தை இன்றைய தினம் சுட்டிக்காட்டியுள்ளது.

பி.ஜி.குமாரசிங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஆவார்.

இதேவேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.