நாட்டில் அனைத்து மக்­களின் மத கலா­சா­ரங்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்­றிய விதத்தில் முன்­னு­ரிமை கொடுக்க வேண்டும் தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­தன 2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல் நிகழ்­வை அர­சாங்கம் உரிய கார­ணங்கள் இன்றி இரத்து செய்­தது கவ­லைக்­கு­ரி­யது என குறிப்பிட்டுள்ளார்.

பிற மதங்­களின் தனித்­து­வத்துக்கும் அர­சாங்கம் முன்­னு­ரிமை கொடுத்தால் மாத்­தி­ரமே தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ,மூன்று இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து கடந்த ஐந்து வருட கால­மாக கொண்­டா­டிய தேசிய தைப்­பொங்கல் தின நிகழ்­வுகள் இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமையானது தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டா­கவே கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொண்­டாட்­டங்­களின் ஊடா­கவே தேசிய நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும் என்றும், ஓர் இனத்தின் மத கலா­சா­ரங்­களை பிறி­தொரு இனத்­தவர் புரிந்துகொள்­வது அவ­சி­ய­ம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து வருட கால­மாக 25 மாவட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைத்த வகையில் நத்தார், தைப்­பொங்கல், ரமழான் போன்ற அனைத்து பண்­டி­கைகளும் தேசிய விழா­வாக இளைஞர், யுவ­தி­க­ளினால் வெகு­வி­மர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­ட நிலையில் நாளை தைப்­பொங்கல் தின நிகழ்­வுகள் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எவ்­வித உரிய கார­ணங்­க­ளு­மின்­றி பொங்கல் விழா இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஓர் இனத்­துக்கும், கலா­சா­ரங்­க­ளுக்கும் மாத்­திரம் முன்­னு­ரிமை அரச ரீதியில் வழங்­கப்­படும் பட்­சத்தில் அங்கு முரண்­பா­டு­களே தோற்றம் பெறும் என சுட்டிக்காட்டிய அவர் ,இதற்கு நாட்டி, இடம்பெற்ர வர­லாற்றுச் சம்­ப­வங்கள் சான்று பகர்­கின்­றதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதனை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும் என்றும், பல்­லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின் தனித்­து­வத்­துக்கும் முன்­னு­ரிமை கொடுத்தால் மாத்­தி­ரமே அங்கு ஜன­நா­யகம் நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­படும் என குறிப்பிட்ட அவர், ஆனால் இன்று இந்­நிலை கேள்­விக்கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.