19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற புத்தர் சிலை ஒன்றை மீண்டும் ஒப்படைப்பதற்கு  அதனை எடுத்துசென்ற பிரிட்டிஷ் பிரஜையின் குடும்ப உறவினர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் பிரிட்டனின் தொல்பொருளியலாளரான Harry Charles Purvis Bell என்பவரினால் கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இருந்த புத்த பெருமானின் உருவ சிலை எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சிலையை மீண்டும் ஸ்ரீதலதா மாளிகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை பிரிட்டிஷ் தொல் பொருளியலாளரின் பேரனும் அவரது மனைவியும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.