ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் H.M.C நிமல்சிரி தெரிவித்துள்ளார்.