கொழும்பு வளிமண்டலத்தில் தூசி துகள்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

நேற்றைய தினம் காலை மற்றும் மாலை வேளையில் தூசி துகள்களின் அளவுச் சுட்டி 100 – 150 வரை காணப்பட்டதாக, அந்நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

இந்நிலைமை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

சிறு பிள்ளைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சுவாச நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.