யாழ்ப்பாணம் – இளவாலை பிரதேசத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக இளவாலை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்யச் சென்ற காணி உரிமையாளரான பெண் மற்றும் காணி துப்பரவுக்குப் பயன்படுத்த கொண்டுசெல்லப்பட்ட பெக்கோ இயந்திர சிங்களச் சாரதி ஆகியோர் மீது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பெக்கோ இயந்திரம் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.