மட்டக்களப்பில் விபத்து இருவர் பலி! மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை, நுனுகலை பகுதியைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரும் மற்றைய ஒருவரும் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிரிய ரக லொரியின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.