வாடகைக்கு தங்கியிருந்த பஸ் கண்டக்டர் செய்த காரியம்….!

வாடகைக்கு தங்கியிருந்த பஸ் கண்டக்டர் செய்த காரியம்….! பொலநறுவை ஹிங்குராகத்தை பகுதியில் தாய் தந்தை மற்றும் மகள் என மூவரடங்கிய அழகிய குடும்பம்.

சொந்த வீட்டில் வசித்த வந்த இவர்களுக்கு கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மகள் ஒருவரும் காணப்படுகின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலநறுவை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் கடமையாற்றும் இளைஞர் ஒருவர் தாம் தங்குவதற்கு வாடகை அறை ஒன்றை தேடி வருகின்றார்.

குறித்த குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களின் வீட்டிலேயே வாடகைக்கு தங்கிவிடுகின்றார்.

சிறிது காலம் சென்றதும் டிப்போவில் பணியாற்றும் குறித்த நபர் அவர் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகளை காதலிக்க ஆரம்பிக்கின்றார்.

பின்னர் குறித்த சிறுமியும் டிப்போவில் பணிபுரியும் பேருந்து நடத்துனரை காதலிக்கின்றாள்.

இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் சிறுமியின் தாய் மற்றும் தந்தையருக்கு விவகாரம் தெரியவந்துள்ளது.

பேருந்து நடத்துனரை வீட்டை விட்டு வௌியேறுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீட்டை விட்டு வௌியேறிய குறித்த நபர் சிறுமியையும் ஆசைவார்த்தைகள் கூறி அழைத்து சென்றுவிட்டார்.

அப்பகுதியிலேயே பிரிதொரு வாடகை வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து தினமும் சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிறுமி பொலநறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளின் பின்னர் குறித்த சிறுமி சுமார் 14 நாட்கள் பெரும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.