புங்குடுதீவில் காணாமல்போன அரச ஊழியார் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபை உழியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறித்த அரச ஊழியர் கடந்த வியாழனன்று கடமையின் நிமித்தம் புங்குடுதீவில் உள்ள வீட்டுத்திட்ட தொகுதிக்கு சென்றுள்ளனர்

அதன் பின்னர் அவர் காணாமல்போயிருந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.