சோதனைகள் இன்றி இலங்கைக்குள் சீனர்கள் – ஜே.வி.பி கருத்து!

130 சீனர்கள் எவ்வித சோதனையுமின்றி இலங்கைக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (12) வெள்ளவத்தை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த விஜித

”இம்மாதம் 7 ஆம் திகதி சீனாவிலிருந்து வந்த ஏழு விமானங்களில் 79 சீனப் பிரஜைகளும், கடந்த 10 ஆம் திகதி சீனாவில் இருந்து வந்த 60 பேர் உள்ளிட்ட கிட்டத்தட்ட 130 பேர் எந்தவித மருத்துவ சோதனைக்கும் உடபடுத்தப் படாமல் நாட்டுக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்”

என்று தெரிவித்துள்ளார்.