கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தவிர்க்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறிய 2 ஆயிரத்து 908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

இதேவேளை ஊரடங்கு உத்தரவினை மீறி செலுத்தப்பட்ட 748 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவல் துறைமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையிலான ஆறு மணித்தியால காலப்பகுதிக்குள் மாத்திரம் ஊரடங்கு உத்தரவினை மீறிய 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 வாகனங்களும் காவல் துறையினரின் வசமாக்கப்பட்டுள்ளது.