நான்கு வயது சிறுமிக்கு தொற்று இல்லை – உறுதிப்படுத்தினார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று(வியாழக்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகின்றது.

நேற்று அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .

Posted by Thangamuthu Sathiyamoorthy on Thursday, March 26, 2020