இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒருதலைப்பட்சமாக தான் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்புவதாக வெளியான செய்திகளை கடுமயாக மறுத்துள்ளார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவேன் என்ற செய்திகள் பொய்யானவை.

கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு மற்றொரு அரசியலமைப்பு நெருக்கடி தேவையற்றது. நெருக்கடியான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு வழங்க சர்வாதிகார நடவடிக்கை அவசியமாகும். எந்தவொரு இன்னலான சூழ்நிலையிலும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

இன்று (23) முன்னாள் சபாநாயகர் தலைமையில் அவரது இன்று அரசியலமைப்புப் பேரவை கூடுகின்றது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சபையின் முன்னாள் அலுவலக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.