இது தொடர்பாக செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

மகாவலி, கமத்தொழில், நீர்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சு

(කෘෂිකර්ම අංශය / விவசாயபஂ பிாிவு / Agriculture Division)

எனது இலக்கம் : 7/1/4/10/කා/ල ො/නි/ප්‍ර                                                                                        திகதி : 2020.05.01

ஊடக அறிக்கை

நிவாரண உதவியின் கீழான உரத்தை விநியோகிப்பதில் உரவிநியோக முகவர்களினால் உரிய விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்வதாக, நாளாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நெல் உற்பத்தியை தவிர்ந்த ஏனைய உற்பத்திகளுக்காக வழங்கப்படும் 50 கிலோகிராம் பொதி நிவாரண உரத்தின் விலை 1000ஃ00 ரூபா ஆவதுடன் கலப்பு செய்யப்பட்ட ஒரு மூடை உரத்தின் விலை 1150ஃ00 ரூபாவாகும். இந்த நிர்ணய விலைகளுக்கு அமைவாக இவை உர பொதிகளில் முத்திரையிடப்பட்டுள்ளது. உர இறக்குமதி நிறுவனங்களின் போக்குவரத்து செலவு மற்றும் விற்பனை முகவர்களுக்கான இலாப பங்கை கவனத்தில் கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதுடன் உரத்திற்கான அனைத்து செலவுகளும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இதனால் நிவாரண உரம் என்பது பொது மக்களுக்கான சொத்தாகும். நிவாரண உரம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தவறுகளும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடிவதுடன் நிவாரண உரம் தொடர்பில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து எத்தகைய சிவில் பிரஜைக்கும் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பிப்தற்கான ஆற்றலுண்டு. உரத்தை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை முகவர்களின் விற்பனை முகவர் தன்மையை இரத்து செய்யுமாறு உரத்தை விநியோகிக்கும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் உர விற்பனை முகவர் ஒருவரினால் குறிப்பிட்ட விலைக்கும் பார்க்க கூடுதலான விலைக்கு உர விற்பனை செய்யப்படுமாயின் விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவின் 0113403931 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அல்லது 011 340 3794 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

மேலும் இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்காக மரக்கறி , பழவகை மற்றும் துறை சார்ந்த உற்பத்திக்காக வழங்கப்படும் நிவாரண இரசாயன உரம் விவசாய ஆலோசகர்களின் பரிந்துரைக்கு அமைய விவசாய சேவை மத்திய நிலையங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகேஷ் கம்மம்பில
பணிப்பாளர்
தேசிய உர செயலாளர் அலுவலகம்