எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் எனஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு மே 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.இதேவேளை எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது