கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 07 பேர் உட்பட இன்றுமட்டும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 416 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


மேலும் கொரோனா தொற்று உறுதியாகிய 33 கடற்படையினர் உட்பட மேலும் 40 பேர் இன்று குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.