உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வருகை தந்த மோட்டார் வாகனம் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தில் இருந்த தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர் என்றும் அவர்களை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.