தடையையும் மீறி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று(புதன்கிழமை) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்றைய தினம் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகின்றது.

இதேவேளையில் சிவாஜிலிங்கத்தை பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைதாகியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.