இலங்கையூடாக நடக்கும் ஆட்கடத்தல் மற்றும் இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 27ஆம் திகதி போலி பாஸ்போர்டுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மோசடி அம்பலமாகியது.

இதையடுத்து எயார்லைன்ஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மோசடி நடவடிக்கைகளுக்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை ஏற்பாடு செய்ததாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.