யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

0

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இ.போ.ச. பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்தின் நடத்துனர் வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்தவர் இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

நடத்துனருக்கு தொற்று உறுதியானதை சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தினர்