இலங்கையில் கொரோனாவால் மேலும் 03 பேர் உயிரிழப்பு, மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்வு

20

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுடன் வேறு நோய்களும் இவர்களுக்கு இருந்துள்ளது.

மொறட்டுவ பகுதியை சேர்ந்த 84 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோயும் இவரது மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கொழும்பு- 10 பகுதியை சேர்ந்த 70 வயது நபர். கொவிட் நோயுடன் சிறுநீரக நோய் மற்றும் பக்கவாததினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு- 13 ஐ சேர்ந்த 75 வயது நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.