கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் மாற்றம் !

173

கொரோனா தொற்று பரவல் காரணமாக, அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து, எதிர்வரும் 2 வாராங்களில் ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது .