பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

144

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து தங்கள் கடமைகளைச் செய்ய பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு சண்டே ரைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு பிரதமரின் ஊடகச் செயலாளர் அலரிமாளிகை பூட்டப்படவில்லை என்று பிரதமரின் ஊடக செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை என்று சுட்டிக்காட்டினார். தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக பிரதமர் கூட ஏளனம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.,

எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட ரொஹான் வெலிவிட்டவுக்கு உரிமை இல்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.