இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23,311 ஆக உயர்வு

64

நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 17 ஆயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 877 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வரும் அதேவேளை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.