யாழ். பல்கலை. வாயிலில் பொலிஸார் தடுக்க தடுக்க தீபம் ஏற்றிய மாணவன் கைது!

94

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்தனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் ம. தர்ஷிகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மாணவர்களை தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

இதையடுத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன.