வட மாகாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளுக்கும் பூட்டு

60

கொரோனா நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளரால் அறிவுறுத்தபட்டுள்ளது.