பேஸ்புக்கில் HIV தடுப்பு மாத்திரைகள் தொடர்பான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் திடீரென குறித்த விளம்பரங்கள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இவ் விளம்பரங்கள் அனைத்தும் மக்களை தவறான முறையில் வழிகாட்டுவதாக குறிப்பிட்டே நீக்கப்பட்டுள்ளன.

மேலும் இம் மாத்திரைகள் பக்க விளைவுகளையும் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது சிறுநீரகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தன்மை அவற்றில் காணப்படுகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமானது PrEP (Pre-Exposure Prophylaxis) எனப்படும் குறித்த மாத்திரைகள் HIV மற்றும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக உயர் வினைத்திறனுடன் செயற்படக்கூடியவை என தெரிவித்துள்ளது.