பிரித்தானியாவின் 5G வலையமையப்புக்களில் ஹுவாவி நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த பிரித்தானிய அதிகாரிகள் முறையாகப் பரிந்துரைத்துள்ளனர்.

சீன நிறுவனம் தயாரிக்கும் எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனத்தையும் முற்றாகத் தடை செய்யுமாறு பிரித்தானியாவுக்கு அமெரிக்காவிலிருந்து அழுத்தம் வந்த போதிலும் பிரித்தானிய அதிகாரிகள் ஹுவாவி தொழில்நுட்பத்தை பரிந்துரைத்துள்ளனர்.

நேற்றுப் புதன்கிழமை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் கூட்டத்தில் இந்தப் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்ற்ரர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் நடைபெறும் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ரொய்ற்ரர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.