இந்தியாவிலுள்ள பிரபல கட்சியான தி. மு. க கட்சியின் குடும்பத்தை சேர்ந்த கலாநிதிமாறன் தயாரிப்பில் உருவான Sun TV Network limited (Sun pictures) நிறுவனம் தமிழ் திரைப்படங்களை அதிகளவில் வாங்குவதும், தயாரிப்பதுமாக பல வருடங்களாக நடாத்தப்பட்டு வந்தது.

இதற்கு போட்டியாக பல நிறுவனங்கள் வந்ததும் இவர்களின் தரம் குறையாமல் முன்னிலையில் இருந்தனர். தற்போது இலங்கையில் உள்ள நிறுவனங்கள் சில அதிகளவில் இந்திய தமிழ் திரைப்படங்களை உலகமுழுவதும் இணையத்தின் பதிப்புரியையோடு வாங்குவதும், தயாரிப்பதுமாக முன்னிலை வகித்துவருகின்ளனர். இதனால் சண் டி.வியின் வணிக மதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

ஆகவே இதனை பழிவாங்கும் செயலாக கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள மீம் உருவாக்கும் இளைஞர்கள், இந்திய பாடல்களை பதிவேற்றம் செய்யும் இணைய பயனர் என இலங்கை தமிழர்களை மட்டும் குறிவைத்து இந்த பதிப்புரிமை தாக்குதலை நடாத்தி வருகின்றது சண் நிறுவனம். இந்திய தமிழர்கள் எவருக்கும் இந்த பதிப்புரிமைமீறல் அனுப்பபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.