கடந்த வருடம் அன்ரோயிட் சாதனங்களுக்காக மாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வசதி ஒன்றினை தற்போது iOS சாதனங்களுக்காகவும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதாவது யூடியூப் அப்பிளிக்கேஷனில் காண்பிக்கப்படவேண்டிய வீடியோக்களின் வகைகளை விரும்பிய வகையில் மாற்றியமைக்கக்கூடிய (Personalised Topics) வசதியே கடந்த வருடம் அன்ரோயிட் அப்பிளிக்கேஷனில் வழங்கப்பட்டிருந்தது.

இவ் வசதியே தற்போது யூடியூப் இணைப்பக்கம் மற்றும் iOS அப்பிளிக்கேஷன் என்பவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று முன்னர் ஆங்கிலத்தில் மாத்திரம் இவ் வசதி வழங்கப்பட்டிருந்ததுடன் தற்போது ஸ்பானிஸ், போர்த்துக்கீஸ் மற்றும் பிரஞ்ச் ஆகிய மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

இவ் வசதியானது Youtube Mixes, Creators, Music, Gaming மற்றும் Learning போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.