Zoom ஆனது மிகவும் பிரபல்யமான வீடியோ கொன்பரன்ஸிங் அப்பிளிக்கேஷனாக குறுகிய காலத்தில் மாறியுள்ளது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷனுக்கு எதிராக பல புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனை வலுவாக்கும் வகையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சுமார் 5 இலட்சம் வரையான Zoom Login விபரங்கள் Dark Web இல் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Bloomberg வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு கணக்கும் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் பல மில்லியன் கணக்கானவர்கள் Zoom அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களில் தரவுகள் திருடப்பட்டுவருகின்றன.

இவ்வாறு திருடப்படும் தகவல்களே Dark Web இல் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் கடந்த வாரம் Zoom ஆனது பாதுகாப்புடன் கூடிய 5.0 பதிப்பினை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.