கூகுளிற்கு தெரியாத எந்த விடயமுமே இருக்க முடியாது என பொதுவாக கூறுவார்கள்.

அந்த அளவிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் தேடித்தரக்கூடியதாக கூகுள் தேடற்பொறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தப்படும் இந்த தேடற்பொறியே ஏனைய தேடற்பொறிகளையும் விட முன்னணியில் திகழ்கின்றது.

இதற்கு இதன் வேகமான செயற்பாடும் ஒரு காரணமாகும்.

இப்படியிருக்கையில் தேடலை மேலும் மேம்படுத்தும் முகமாக கூகுள் தேடற்பொறியின் நெறிமுறையில் (Algorithm) மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதலாம் கட்ட அப்டேட் ஆனது கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்ட பிரதான அப்டேட் ஆனது இம் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயனர்களின் தேடலை மேலும் இலகுபடுத்துவதுடன், வேகப்படுத்தியுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.