இந்தியாவை அடுத்து இலங்கையில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

0

பாரதி ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தனது எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டு மென்பொருளை வெளியிட்டுள்ளது. இந்த பயன்பாட்டு மென்பொருள் இந்தியாவில் 2019 முதல் பாவனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டு மென்பொருளை இலங்கையில் 2020 ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி வெளியிட்டுள்ளது. இந்த பயன்பாட்டு மென்பொருள் மூலம் திரைப்படங்கள், இசைகள், தொலைக்காட்சிகள் இன்னும் பல நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

இது போன்று ஏற்கனவே இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான மொபிடல் நிறுவனம் ஶ்ரீ பிளிக்ஸ் APP மற்றும் டயலொக் நிறுவனம் டயலொக் வியூ APP போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை வெளியிட்டிருந்தது.