2018ஆம் ஆண்டு தொழிலுக்காக ஈரானுக்கு அருகில் உள்ள மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 517 பணியாளர்கள் சென்றிருந்தனர்.

எனினும், கடந்த வருடம் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 702 பேர் மாத்திரமே தொழிலுக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதிகளவிலான பணியாளர்கள் கட்டார் நாட்டுக்கே பணியாளர்களாக சென்றிருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 780 ஆகும்.

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக முறையே 35 ஆயிரத்து 465 பணியாளர்களும், 32 ஆயிரத்து 860 பணியாளர்களும் சென்றிருந்தனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தரவுக்களுக்கமைய, 2015ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை ஈரான் மற்றும் அதனை அண்மித்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற பணியாளர்களின் எண்ணிக்கையில் வெகுவாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

குறித்த பிராந்தியத்தில் இடைக்கிடையே ஏற்படும் யுத்த சூழ்நிலையே பணியாளர்களது வீழ்ச்சிக்கான காரணம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.